© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
32ஆவது அரபு லீக் உச்சிமாநாடு 19ஆம் நாள் ஜெட்டாவில் நடைபெற்றது. சிரியா அரசுத் தலைவர் பஷர் அல் ஆசாத் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார். நடப்பு உச்சிமாநாட்டின் தலைவர் நாடான சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் தலைமையமைச்சருமான சல்மான் துவக்க விழாவில் உரை நிகழ்த்தி, சிரியா அரபு லீக்கிற்குத் திரும்புவதை வரவேற்றார்.
அரபு லீக் உச்சிமாநாடு முடிந்த பின்னர் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அரபு நாடுகளின் உள் விவகாரங்களில் வெளிப்புறச் சக்திகள் தலையிடுவதில் இருந்து விடுபடுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அரசு நிறுவனங்களுக்கு வெளியே ஆயுதக் குழுக்கள் அல்லது போராளி குழுக்களை உருவாக்குவது தொடர்பாக தன்னுடைய எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அரபு நாடுகள் லீக், இராணுவ மோதல்கள் மக்களின் துன்பத்தையும் நாட்டின் சீர்குலைவையும் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.