ஜி7 உச்சிமாநாட்டில் சீனா தொடர்பான பிரச்சினைகளை மிகைப்படுத்துவதற்கு எதிர்ப்பு
2023-05-21 16:52:18

7 நாடுகள் குழுவின் ஹிரோஷிமா உச்சிமாநாட்டில் சீனா தொடர்பான பிரச்சினைகள் மிகைப்படுத்தப்படுவது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 20ஆம் நாள் கருத்து தெரிவித்துள்ளார்.

7 நாடுகள் குழு, சீனத் தரப்பின் கடும் எதிர்ப்பைப் புறக்கணித்து சீனாவுக்கு எதிராக அவதூறு பரப்பி, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக சீனா, இவ்வுச்சிமாநாட்டை நடத்திய ஜப்பான் உள்ளிட்ட தரப்புகளுக்குக் கடும் மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், தைவான் சுதந்திரம் சக்திக்கு இந்த அமைப்பு ஆதரவளிப்பது, தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்துக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.  அதைப் போல், ஹாங்காங், சின்ச்சியாங் மற்றும் திபெத் விவகாரங்கள் சீனாவின் உள் விவகாரங்களாகும். எந்த ஒரு வெளிப்புற சக்தியும் மனித உரிமையைச் சாக்குப்போக்காகப் பயன்படுத்தி இதில் தலையிடுவதைச் சீனா உறுதியாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.