செங்தூ நகரில் 520 தினத்துக்கான வாழ்க்கை விழா
2023-05-22 16:32:45

“520” என்ற சீன இணையக் காதல் தினத்தை முன்னிட்டு செங்தூ வாழ்க்கை விழாவின் துவக்க நிகழ்ச்சி மே 19ஆம் நாளிரவு நடைபெற்றது.

மே தொடங்கி ஜூன் திங்கள் வரை நடைபெறும் இந்த வாழ்க்கை விழாவில், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் செங்தூ, தெயாங், மெய்ஷான், ஸியாங் ஆகிய நகரங்களிலும், ச்சொங்ச்சிங் மாநகரிலும் 100க்கும் மேலான நுகர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

மேலும், பல்வேறு துறைகளில் நகரவாசிகளின் பல்வகையான நுகர்வு விருப்பங்களை அறிந்து கொண்டு, செங்தூ நகரின் நுகர்வுச் சந்தையை மேலும் வளர்க்கும் விதம், “520 செங்தூ வாழ்க்கை விழாவுக்கான நுகர்வு போக்கு பட்டியல்” ஜூன் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.