சீனா-ஐரோப்பா இடையே பல சாதனைகளைப் பெற்றுள்ள பொருட்காட்சி
2023-05-22 10:27:15

3ஆவது சீனா-மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருட்காட்சியும், சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சியும் அண்மையில் சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரில் வெற்றிகரமாக நடைபெற்றன. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சீனாவின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டியுள்ள இந்நிகழ்ச்சி மூலம், நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பின் சாதனைகளும் பெறப்பட்டுள்ளன.

நடப்புப் பொருட்காட்சியில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் 5000 வகைகளிலான வணிகப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த முறையை விட 25 விழுக்காடு அதிகம். மேலும், 62 வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகின. அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை 1778 கோடி அமெரிக்க டாலர் ஆகும். இத்தொகை முன்பை விட 17.7 விழுக்காடு அதிகம். உயர்நிலை சாதனத் தயாரிப்பு, உயிரி மருத்துவம், எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட முன்னேறிய தொழில்களுடன் இத்திட்டங்கள் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.