கூட்டு வெற்றிக்குத் துணைப் புரிந்த சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு
2023-05-22 10:54:53

பல்வேறு நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் அண்மையில் கூறுகையில், ஷிஆன் நகரில் நடைபெற்ற சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு, ஒன்றுக்கொன்று நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றை உருவாக்கப் பாடுபட்டுள்ளது. ஒரே நேரத்தில் பிரிவினையை ஏற்படுத்திய ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து தெளிவாக வேறுபட்டது என்று தெரிவித்தனர்.

பாகிஸ்தான் விமர்சகர் முஹம்மது ஃபியாஸ் கியானி கூறுகையில், சீனாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்குமிடையிலான உறவு, பொது எதிர்காலச் சமூகப் பகிர்வு என்ற புதிய கட்டத்தில் உள்ளது என்றார்.

ஜப்பானின் புகழ்பெற்ற அறிஞரும், ஹிகாஷி நிப்பான் சர்வதேச பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கசுகி சயோன்ஜி கூறுகையில், ஜி7 உச்சி மாநாட்டில், அமெரிக்காவை மையமாகக் கொண்ட மேலை நாடுகள் சீனாவின் மீது பழி தூற்றின. உலகத்தைப் பிளவுபடுத்திய கூட்டம் இதுவாகும். அதற்கு மாறாக, சீன-மத்திய ஆசிய உச்சி மாநாடு, பல்வேறு நாடுகளின் தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை முன்னேற்றும் விதமாக அமைந்தது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு சீனாவால் முன்வைக்கப்பட்டது. ஆனால், சீனாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், உலக அமைதி மற்றும் மனித குல வளர்ச்சிக்கும் இது துணை புரியும் என்றார் அவர்.