உலக சுகாதார மாநாட்டில் தைவான் பங்கேற்கும் முன்மொழிவுக்குச் சீனா எதிர்ப்பு
2023-05-22 19:14:54

ஒரு சில நாடுகள் முன்வைத்த உலக சுகாதார மாநாட்டில் பார்வையாளராக தைவான் பங்கேற்கும் முன்மொழிவு 76ஆவது உலக சுகாதார மாநாட்டில் நிராகரிக்கப்பட்டது.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி சென் சூ இந்த மாநாட்டில் உரை நிகழ்த்துகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டுக்குக் கீழ், தைவான் அதிகாரிகள் உலகச் சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம். "சர்வதேச சுகாதார விதிகளின் படி" தைவானில் தொடர்பு அலுவலகத்தை நிறுவி, பயனுள்ள முறையில் செயல்பட முடியும் ஆகியவற்றைத் தைவான் அதிகார வட்டாரம் பொருட்படுத்தாமல், தொடர்புடைய  முன்மொழிவை  வேண்டுமென்றே முன்னேற்றி வருகின்றது. உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்வதைச் சாக்குப்போக்காக, பிரிவினைவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தைவான் சுதந்திர சக்திகளின் அரசியல் சூழ்ச்சியை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. தைவான், சீன மக்கள் குடியரசிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகளில் தைவான் கலந்து கொள்வது ஒரே சீனா என்ற கோட்பாட்டின் படி செயல்படுத்தப்பட வேண்டும் என்று சென் சூ கூறினார்.