மற்ற நாடுகள் மீது ஆணை பிறப்பிக்கும் தகுநிலை ஜி7 குழுவுக்கு இல்லை
2023-05-22 19:05:46

ஜி7 நாடுகள் குழுவின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட அணு ஆயுதக் குறைப்பு பற்றிய ஹிரோஷிமா தொலைநோக்கு என்ற ஒரு ஆவணத்தில், சீனாவின் அணு ஆற்றல் கொள்கைகள் மீது குறைகூறினர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 22ஆம் நாள் கூறுகையில், சர்வதேச அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், 7 நாடுகள் குழுவின் குடும்ப விதிகள் அல்ல. 7 நாடுகளின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளை சீனா மறுக்கிறது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மற்ற நாடுகள், சீனாவின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் அல்லது அணு ஆயுத அச்சுறுத்தல் விடுக்காமல் இருந்தால், சீன அணு ஆயுத அச்சுறுத்தலுக்குள்ளாகாது என்ற வாக்குறுதியை சீனா அளித்துள்ளது. ஆனால், 7 நாடுகள் குழுவில் இத்தகைய வாக்குறுதியை அளித்த நாடு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.