உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்த அமெரிக்காவுக்கு ஜப்பான் மக்கள் எதிர்ப்பு
2023-05-22 10:36:42

அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் 21ஆம் நாள் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் உக்ரைன் அரசுத் தலைவர் செலன்ஸிகியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், அமெரிக்கா உக்ரைனுக்கு 37.5 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை வழங்க உள்ளதாக அறிவித்தார். இதற்கு ஜப்பானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இது ஹிரோஷிமாவை இழிவுபடுத்தியது போன்று என்று கருதினர்.

கடந்த சில நாட்களாக, ஜப்பானில் பல குழுக்களும், பிற நாட்டவர்களும், ஹிரோஷிமா உள்ளிட்ட இடங்களில் பேரணிகளை நடத்தி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலான ஜி 7 உச்சி மாநாடு “போர் உச்சி மாநாடாக” மாறிக் கொண்டிருக்கிறது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.