76ஆவது உலகச் சுகாதாரப் பேரவைக் கூட்டம் துவக்கம்
2023-05-22 15:13:06

76ஆவது உலகச் சுகாதாரப் பேரவைக் கூட்டம் 21ஆம் நாள், ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது. உலக சுகாதார அமைப்பின் தற்போதுள்ள விவகாரங்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சி குறித்து இக்கூட்டத்தில் தீர்மானம் வழங்கப்படும். இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள், உலகச் சுகாதார அவசரக் கட்டுக்கோப்புக்குள் உலகச் சுகாதார அமைப்பின் முக்கிய பங்கு பற்றி விவாதிப்பார்கள். மேலும், கடந்த ஆண்டில், இவ்வமைப்பின் முன்னேற்றம், சாதனைகள் மற்றும் சவால்கள் பற்றியும் இவ்வமைப்பின் பணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய சுகாதார பரவல், அவசர சுகாதார சம்பவம், உடல் நலம் மற்றும் நலவாழ்வு முன்னேற்றம் முதலிய விவகாரங்கள் குறித்தும் முதலிய இதில் பரிசீலனை செய்யப்படும்.