தயார் நிலையில் ஷென்சோ-16 விண்கலம்
2023-05-23 11:03:25

சீனாவின் ஷென்சோ-16 விண்கலமும் லாங்மார்ச்-2F ஏவூர்தியும், 22ஆம் நாள் ஏவு  மையத்திற்கு அனுப்பப்பட்டன. தற்போது, ஏவு மையத்தின் வசதிகள் மற்றும் உபகரணங்கள் சீரான நிலையில் உள்ளன. ஏவுதலுக்கு முந்தைய செயல்பாட்டு சரிபார்ப்பு மற்றும் கூட்டுச் சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாவுகம், இவ்விண்கலம் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.