உடல் நலம் மற்றும் நலவாழ்வுக்கு சீனாவின் பங்கு
2023-05-23 11:19:27

76ஆவது உலகச் சுகாதாரப் பேரவைக் கூட்டம் 21ஆம் நாள், ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது. இப்பேரவைக் கூட்டத்தின் துணை தலைவர் சௌவ் சுயே டாவ் 22ஆம் நாள், இக்கூட்டத்தின் பொது விவாதத்தில் உரைநிகழ்த்தினார். நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வளரும் நாட்டு மக்களின் உடல் நலம் மற்றும் நலவாழ்வு இலட்சியத்தை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தி வருகிறது. சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் மக்கள் அனைவரும் அனுபவிக்க சீனா முயற்சி செய்து வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளில், உலகளவில் 76 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை சீனா அனுப்பி, 29 கோடி மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கியுள்ளது. இதன் மூலம், உலக மக்களின் உடல் நலம் முன்னேறியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் உடல் நலத்தை முன்னுரிமையுடைய நெடுநோக்கு இடத்தில் சீனா வைத்துள்ளது. நலவாழ்வு சீனா எனும் கட்டுமானத்தை முழுமையாக விரைவுபடுத்தி, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் சீர்திருத்தையும் ஆழமாக்கி, உலகளவில் மிகப் பெரிய மருத்துவச் சிகிச்சைச் சேவை அமைப்புமுறையையும் மருத்துச காப்பீட்டு முறைமையையும் சீனா கட்டியமைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை மற்றும் பங்குகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். சர்வதேச சமூகத்துடன் இணைந்து, மக்களின் சுகாதார மற்றும் நலவாழ்வுக்கான பொது சமூகத்தை உருவாக்க சீனா பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.