கடன் உச்ச வரம்பு பற்றிய பேச்சுவார்த்தை மீது பைடன் நம்பிக்கை
2023-05-23 10:45:00

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சித் தலைவருடன் கடன் உச்ச வரம்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் முன் கூறுகையில், கடன் பொறுப்பு நிறைவேற்றத்துக்கான உடன்படிக்கையில் இரு கட்சிகள் முன்னேற்றம் அடைய உள்ளதாகத் தெரிவித்ததோடு, இருதரப்புகளுக்கிடையே பெரும் கருத்துவேற்றுமை நிலவுவதையும் ஏற்றுக் கொண்டார் என்று அந்நாட்டின் ஊடகம் 22ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

இதனிடையே, அமெரிக்க நிதி அமைச்சர் யெல்லென் நாடாளுமன்றத் தலைவர்களிடம் வழங்கிய கடிதத்தில், ஜுன் முதல் தேதிக்கு முன் அமெரிக்க நாடாளுமன்றம் கடன் உச்ச வரம்பை உயர்த்த அல்லது இடைநிறுத்தத் தவறினால், அரசின் கடன் பொறுப்பு நிறைவேற்றப்படாமல் இருக்கும் என்று மீண்டும் தெரிவித்தார்.