GIAHSயில் புதிதாக சேர்க்கப்பட்ட சீனாவின் 4 மரபுச் செல்வங்கள்
2023-05-23 10:30:38

உலகளவில் முக்கிய விவசாய மரபுச் செல்வ அமைப்புமுறைகளில்(GIAHS) புதிதாகச் சேர்க்கப்பட்ட 24 மரபுச் செல்வங்களுக்கு ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மே 22ஆம் நாள் ரோம் நகரில் சான்றிதழ்களை வழங்கியது. சீனா உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 24 மரபுச் செல்வங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ஹேபெய் மாநிலத்தின் ஷெசியான் உலர்நிலத்தின் கல் படிமுறை வயல் அமைப்புமுறை, ஃபூஜியான் மாநிலத்தின் ஆன்சி தியேகுவான்யின் தேயிலை கலாச்சார அமைப்புமுறை, உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அர் ஹார்கின் புல்வெளியில் நாடோடி அமைப்புமுறை, சேஜியாங் மாநிலத்தின் ச்சிங்யுவான் காடு-காளான் கூட்டு வளர்ப்பு கலாச்சார அமைப்புமுறை ஆகியவை, இவற்றிலுள்ள சீனாவின் 4 மரபுச் செல்வங்களாகும்.

விவசாய மரபுச் செல்வப் பாதுகாப்பில் சீனாவின் பங்கிற்கு ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் துணைத் தலைமை இயக்குநர் நன்றி தெரிவித்தார்.

இதுவரை, 24 நாடுகளைச் சேர்ந்த 74 அமைப்புமுறைகள் மற்றும் இடங்கள் GIAHSயில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் சீனாவின் 19 அமைப்புமுறைகள் இடம்பெற்றுள்ளன.