ஜப்பானின் அணுக் கழிவு நீர் வெளியேற்ற திட்டம் தோல்வி
2023-05-23 11:07:36

ஜப்பானில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டம் தோல்வியடைந்தது. கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், இவ்வுச்சி மாநாட்டின் கூட்டறிக்கையில், இத்திட்டத்துக்கான வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் மீது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் சுதந்திர கள ஆய்வுக்கு ஆதரவு மட்டும் இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானின் திட்டத்துக்கு ஜெர்மனி எப்போதுமே எதிர்ப்பு தெரிவிக்கிறது. அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றக் கூடாது என்று ஜெர்மனி சுற்றுச்சூழல் அமைச்சர் லெம்க் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகள் அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை அறிந்து கொள்ளச் செய்யும் வகையில், இவ்வுச்சி மாநாட்டில் ஜி7 அமைப்பு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஃபுகுஷிமா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஜப்பான் வினியோகித்தது. ஆனால், இதற்கு முன்பு, இம்மாவட்டத்தின் உணவுகளில் கதிர்வீச்சு பொருட்கள் குறிப்பிட்ட அளவுக்கு மீறியது என்று பல முறை சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

கடலில் அணு கழிவு நீரை வெளியேற்றுவது கடல் உயிரினம் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு மதிப்பிட முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேலதிகமான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.