மேலும் தைரியமான செயல் மேற்கொள்ளுமாறு ஐ.நா வேண்டுகோள்
2023-05-23 10:38:26

மே 22ஆம் நாள் சர்வதேச உயிரினங்களின் பன்முகத்தன்மை தினத்தையொட்டி, ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் நிகழ்த்திய காணொளி உரையில், பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வாக்குறுதியை நனவாக்கி, மேலும் தைரியமான செயல்களை மேற்கொண்டு, தொடரவல்ல எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

10 இலட்சம் வகை உயிரினங்கள் அழிவின் தருவாயில் உள்ளன. அரசுகள், நாட்டுப்புறச் சமூகம், தனிநபர் நிறுவனங்கள் ஆகியவை ஒத்துழைத்து, மனிதகுல தொடரவல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.