சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சீனாவில் பயணம்
2023-05-24 10:18:28

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான ச்சிங்காங், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ரஃபேல் க்ரோஸியுடன் மே 23ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.

ச்சின்காங் கூறுகையில், அணு ஆற்றலுடன் தொடர்புடைய உலக மேலாண்மையில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் மேலதிக பங்காற்றுவதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது. இந்நிறுவனம் புறநிலையில் நியாயமான மனப்பாங்குடன் சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு அமைப்புமுறையைப் பேணிக்காக்க வேண்டுமென சீனா விரும்புகிறது என்றார்.

சீனாவுடனான ஒத்துழைப்புக்கு சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அமெரிக்க-பிரிட்டன்-ஆஸ்திரேலியா அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒத்துழைப்பு குறித்து வெளிப்படையான வழிமுறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று க்ரோஸி தெரிவித்தார்.

சீன அணு ஆற்றல் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று, க்ரோஸி மே 22 முதல் 26ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்கிறார், அணு ஆற்றல் பற்றிய முக்கிய வசதிகளைப் பார்வையிட்டதுடன், சீன அணு ஆற்றல் நிறுவனத்துடன் பல உடன்படிக்கைகளில் அவர் கையொப்பமிட்டார்.

சீன ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சீனாவுடன் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, அணு ஆற்றல் துறையில் உலக வளர்ச்சி முன்மொழிவு மற்றும் பாதுகாப்பு முன்மொழிவின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றுவதை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.