தைவானுக்கான ஆதரவு பற்றிய குறிப்பிட்ட நாட்டின் சூழ்ச்சி மீண்டும் தோல்வி
2023-05-24 11:22:08

76ஆவது உலகச் சுகாதார பேரவைக் கூட்டத்தில் பார்வையாளராக பங்கெடுக்க தைவானுக்கு அழைப்பு விடுப்பதென்ற முன்மொழிவு அண்மையில் நிராகரிக்கப்பட்டது. இதுவரை, இக்கூட்டத்தில் பங்கெடுக்க தைவானுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சி தொடர்ந்து 7 முறை தோல்வியடைந்துள்ளது. ஒரே சீனா என்ற கொள்கை, கால ஓட்டத்துக்குப் பொருத்தமான பொது விருப்பமாகும் என்பதை இது முழுமையாக காட்டியுள்ளது. தைவானுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் நடிப்பு வெறுப்பை மட்டும் ஈட்டும்.

தைவான் தொடர்பான இம்முன்மொழிவு, பெலிஸ் உள்பட குறிப்பிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்டாலும், அதன் பின்னணித் தலைவர் அமெரிக்கா தான். மேலும், சில நாட்களுக்கு முன், தைவானிலுள்ள அமெரிக்க சங்கம், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தைவானில் அமைத்த நிறுவனங்களுடன் இணைந்து செய்திக் குறிப்பை வெளியிட்டு, உலகச் சுகாதார பேரவைக் கூட்டத்தில் பங்கெடுக்க தைவானுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. குறிப்பிட்ட சில நாடுகள் இப்படி செயல்படுவது வழக்கம். ஆனால் அவற்றின் சூழ்ச்சி தோல்வியடைவதில் ஐயமில்லை.

தைவானுக்கு ஆதரவளிப்பது தைவானைப் பயன்படுத்தி சீனாவைத் தடுப்பதற்காக தான், அமெரிக்கா ஆண்டுதோறும் இப்படி செயல்படுவதற்கான காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அமெரிக்கா எவ்வாறு நடித்தாலும், அதன் முயற்சி தோல்வியடையும். தைவான் மக்களைப் பொறுத்தவரை, வலிமைமிக்க தாநாட்டைச் சார்ந்திருந்தால் மட்டும் வளர்ச்சி வாய்ப்புகளையும் சர்வதேச அரங்கில் இடத்தையும் பெற முடியும்.