திபெத் உயர் தர வளர்ச்சி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு
2023-05-24 09:41:36

2023ஆம் ஆண்டு சீனத் திபெத் வளர்ச்சி கருத்தரங்கு 23ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 36 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 150க்கும் மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு பரவல், உயிரின சூழல் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சீனாவின் திபெத் எட்டியுள்ள சாதனைகளை அவர்கள் பாராட்டினர்.

சீனாவுக்கான நேபாள தூதர் பிஷ்னு புகார் ஷ்ரிஸ்தா கூறுகையில்,

வறுமை ஒழிப்புப் பணியில் திபெதின் வெற்றிகரமான அனுபவங்களை, நேபாளம் கற்றுக்கொள்ள வேண்டும். பணியாளர் பயிற்சி, நவீன வேளாண் தொழில் நுட்பத்தின் பயன்பாடு, கிராமப்புற வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளில் சீனா எட்டியுள்ள சாதனைகள் நேபாளத்திற்கு உதவும் என்றார்.

பெய்ஜிங் அன்னிய மொழியியல் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் விகேஷ் குமார் சிங் கூறுகையில்,

திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளில் திபெத் தொல் பொருட்காட்சியை நடத்தியது. திபெத்தின் மனித உரிமை இலட்சியம் இடைவிடாமல் வளர்ந்து வருகின்றது என்றார்.