சீன அரசுத் தலைவர்-ரஷிய தலைமை அமைச்சர் சந்திப்பு
2023-05-24 20:04:39

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 24ஆம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டு வரும் ரஷிய தலைமை அமைச்சர் மிஷுஸ்டினைச் சந்தித்துரையாடினார்.

சந்திப்பின் போது ஷிச்சின்பிங் கூறுகையில், மாபெரும் எதிர்காலம், வலுவான உந்துசக்தி உள்ளிட்ட மேம்பாடுகளுடன், இரு நாடுகள்,  தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, பல்வகை துறைகளின் ஒத்துழைப்பை மேலும் உயர்நிலைக்கு முன்னெடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் நாடுகள் குழு, இருபது நாடுகள் குழு முதலிய பலதரப்பு மேடைகளில், இரு நாடுகள் ஒன்றிணைப்பை வலுப்படுத்தி, பொருளாதார மற்றும் வர்த்தக முதலீட்டுத் தரத்தை உயர்த்தி, மனித தொடர்பைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய-ஆசிய பொருளாதாரக் கூட்டணியுடன், மேலும் திறப்பான பிராந்தியச் சந்தையை உருவாக்கி, தொடர்புடைய நாடுகளுக்கு உண்மையான நலன்களைக் கொண்டு செல்ல விரும்புவதாகவும், ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

மிஷுஸ்டின் கூறகையில், ரஷியா, சீனாவுடன் இணைந்து, உலகின் பலதுருவமயமாக்கப் போக்கை முன்னெடுத்து, சர்வதேசச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பலப்படுத்தி, மனித கருத்து பரிமாற்றத்தை அதிகரிக்க விரும்புகிறது என்று தெரிவித்தார்.