மக்கௌவின் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் பாராட்டு
2023-05-24 14:57:06

மக்கௌ அறிவியல்-1 செயற்கைக்கோளின் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணியில் பங்கெடுத்துள்ள மக்கௌவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய பதில் கடித்ததில் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், மக்கௌ, பெருநிலப் பகுதியுடன் விண்வெளி போன்ற துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சாதனைகளைப் பெற்று வருகிறது. தேசப்பற்றுணர்வை நிலைநிறுத்தி, தேசிய வளர்ச்சிக்கான பொது நீரோட்டத்தில் சேர்ந்து, குவாங்டொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசத்தின் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, மக்கௌவில்“ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் வெற்றிகரமான நடைமுறையாக்கத்திற்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.