அமெரிக்காவைச் சென்றடைந்த சீனாவின் புதிய தூதர்
2023-05-24 14:17:40

அமெரிக்காவுக்கான சீனாவின் புதிய தூதர் சியேஃபொங் மே 23ஆம் நாள் அமெரிக்காவைச் சென்றடைந்தார். நியூயார்க் விமான நிலையத்தில் செய்தி ஊடகங்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் அவர் சந்திப்பு நடத்தினார்.

அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த ஒன்றுக்கொன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி ஆகிய 3 கோட்பாடுகள், புதிய கட்டத்தில் சீன-அமெரிக்க உறவின் அடிப்படையாகும். அமெரிக்கத் தரப்பு, இரு நாட்டு மற்றும் உலக மக்களின் பொது நலனைக் கருத்தில் கொண்டு, சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளின் கோட்பாட்டுக்கிணங்க தைவான் உள்ளிட்ட பிரச்சினைகளை உகந்த முறையில் தீர்த்து, பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, ஒத்துழைப்புகளை முன்னேற்ற வேண்டும் என்றார்.

மேலும், எதிர்காலத்தில், அமெரிக்காவின் பல்வேறு துறையினருடன் தொடர்பு கொண்டு, அமெரிக்காவை மேலும் அறிந்து கொண்டு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது குறித்து ஆராய விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.