2ஆவது யூரேசிய பொருளாதார ஒன்றியத்தின் கூட்டத்தில் ஷி ச்சின்பிங்கின் உரை
2023-05-25 10:55:40

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பை ஏற்று, மே 24ஆம் நாள், காணொலி வழியாக, யூரேசிய பொருளாதார ஒன்றியத்தின் 2ஆவது பொருளாதார மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு, உரை நிகழ்த்தினார்.

தற்போதைய உலகம், நூற்றாண்டு காலத்தில் கண்டிராத நிலைமையில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், உலகில் பலதரப்புவாதமும் பொருளாதார உலகமயமாக்கமும் தடுக்கப்பட முடியாத போக்காகும் எனஅறும் ஷி ச்சின்பிங் தன்னுடைய உரையில் தெரிவித்தார்.

மேலும், வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம் ஆகியவை தொடர்பான உலகளாவிய முன்மொழிவுகளை தான் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியை முன்மொழிந்த 10ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு என்பதையும் நினைவுகூர்ந்தார். யூரேசிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாடாக சீனாவின் வளர்ச்சி, யூரேசிய பிரதேசத்தை விட்டு நீங்காமல் இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்றும் அவர் வலியுறுத்தினார்.