ச்சுங் குவேன் சுன் மன்றக் கூட்டம் துவக்கம்
2023-05-25 19:10:19

2023ம் ஆண்டின் ச்சுங் குவேன் சுன் மன்றக் கூட்டம் 25ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் துவங்குகிறது. கருத்தரங்கு, கண்காட்சி, தொழில் நுட்ப வர்த்தகம், சாதனை வெளியீடு, முன்னேறிய தொழில் நுட்பப் போட்டிகள், தொடர்புடைய நடவடிக்கைகள் ஆகிய 6 பகுதி நிகழ்ச்சிகள், இம்மன்ற கூட்டத்தில் நடத்தப்படவுள்ளன. அவற்றின் மூலம், மெட்டவேர்ஸ், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தகவல் முதலிய துறைகளின் மிக புதுமையான மற்றும் முக்கியமான சாதனைகள், அறிவியல் புத்தாக்கத்தின் ஈர்ப்பாற்றல் ஆகியவை, பொது மக்களுக்கு வெளிக்காட்டப்படும்.