2023ஆம் ஆண்டு உலக வர்த்தக மற்றும் முதலீட்டு முன்னேற்ற உச்சி மாநாடு
2023-05-25 11:06:55

2023ஆம் ஆண்டு உலக வர்த்தக மற்றும் முதலீட்டு முன்னேற்ற உச்சி மாநாடு மே 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஒத்துழைப்பை வலுப்படுத்தினால் மட்டுமே நெருக்கடி மற்றும் சவால்களைச் சமாளிக்க முடியும் என்று இம்மாநாட்டில் பங்கெடுத்த பல்வேறு தரப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், சீன நவீனமயமாக்கம், பசுமை வளர்ச்சி, எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட முக்கிய அம்சங்கள் குறித்து, சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்துடன் 30க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த தொழில் மற்றும் வணிக துறையின் பிரதிநிதிகள் ஆழமாக விவாதம் செய்து, உலகப் பொருளாதார மீட்சிக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

தவிரவும், உறுதியான நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பது, உலகப் பொருளாதார மீட்சியை முன்னேற்றுவது உள்ளிட்ட 5 துறைகளில் பொதுக் கருத்துகள் எட்டப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு உலக வர்த்தக மற்றும் முதலீட்டு முன்னேற்ற உச்சி மாநாட்டுக்கான பெய்ஜிங் முன்மொழிவு உருவாக்கப்பட்டுள்ளது.