7 விழுக்காட்டைத் தாண்டும் இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு
2023-05-25 12:17:15

2022-2023 நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 7 விழுக்காட்டைத் தாண்டக் கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி கந்தாதாஸ் 24ஆம் நாள் தெரிவித்தார்.

இந்தியத் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில், இது தொடர்பான தரவுகள் இம்மாதத்தின் இறுதியில் வெளியிடப்படும் என்றும், இந்தியப் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு தொடரும் என்பதை கடந்த நிதி ஆண்டின் 4ஆவது காலாண்டின் அனைத்துப் பொருளாதார இலக்குகளும் எடுத்துக்காட்டியுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.