செவ்வாய்க் கிரகத்தில் கடல் இருந்தது:சீன அறிவியலாளரின் புதிய கண்டுப்பிடிப்பு!
2023-05-25 14:10:29

செவ்வாய்க் கிரகத்தின் வடக்கிலுள்ள சமவெளியில் கடல் இருந்ததா என்பதில் கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. இதனிடையில், அண்மையில் சீன அறிவியலாளரின் தலைமையிலான சர்வதேச ஆய்வுக் குழு புதிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்துள்ளது.  ஜுரொங் எனும் செவ்வாய் ஆய்வு ஊர்தியில் பொருத்தப்பட்டுள்ள நிகழ்படக் கருவியால் கிடைத்த அறிவியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம், செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பெருங்கடல் படிவப்பாறை பற்றிய பாறையியல் சான்றுகள் முதன்முறையாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இது, செவ்வாய்க் கிரகத்தின் வடக்குப் பகுதியில் கடல் இருந்ததை மெய்ப்பிக்கும் சான்றாகும்.

செவ்வாய்க் கிரகத்தின் வரலாற்றை மீண்டும் உருவாக்குவதற்கு இது புதிய சிந்தனையை வழங்கியுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிப் பயணம் செய்யும் ஜுரோங் ஆய்வு ஊர்தி, புதிய மாதிரிகளுடன் திரும்பினால், செவ்வாய்க் கிரகத்தின் வாழ்வு நிலை மற்றும் உயிரினங்களின் தடங்கள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள முடியும்.