கடன் உச்ச வரம்பு பற்றி அமெரிக்காவின் 2 கட்சிகள் பேச்சுவார்த்தை
2023-05-25 11:40:49

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும், நாடாளுமன்றத்தின் குடியரசு கட்சிக்கும் இடையிலான கடன் உச்ச வரம்பு பற்றிய பேச்சுவார்த்தை 24ஆம் நாள் மீண்டும் நடைபெற்றது. இது, இப்பிரச்சினை குறித்து இரு கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஆகும். அதற்கு முந்தைய சில பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பும் விட்டுக்கொடுக்காததால், பயன் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கா விட்டால், அமெரிக்க அரசு ஜூன் திங்கள் தொடக்கத்தில் கடன் பொறுப்பு மீறலில் சிக்கக் கூடும். இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்று 24ஆம் நாள் அமெரிக்க நிதி அமைச்சர் யெல்லென் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் நிறுவனமானது அமெரிக்கக் கடன் தர மதிப்பீட்டை எதிர்மறையாகக் குறைத்துள்ளதோடு, தற்போதைய பேச்சுவார்த்தையின் தேக்க நிலை காரணமாக அதன் கடன் தர மதிப்பீட்டை மேலும் குறைக்கப்படக் கூடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.