உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள அர்மீனியா மற்றும் அசர்பைஜான்
2023-05-26 11:30:53

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் 25ஆம் நாள் நடைபெற்ற யூரேசிய பொருளாதார ஆணையத்தின் உச்சநிலை விரிவாக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்மீனிய தலைமையமைச்சர் பஷின்யான் கூறுகையில, அர்மீனியாவும் அசர்பைஜானும் ஒன்று மற்றதன் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன என்று தெரிவித்தார். இதுதொடர்பில், அசர்பைஜான் அரசுத் தலைவர் அலியேவ் கூறுகையில், அஜர்பைஜானுக்கு அர்மீனியாவின் மீது எவ்வித உரிமைப் பிரதேசக் கோரிக்கையும் இல்லை என்று கூறினார்.

அதே நாள், ரஷிய அரசுத் தலைவர் புதின், இவ்விரு நாடுகளின் தலைவர்களுடன் மாஸ்கோவில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, நாகா பிரதேச நிலைமை, அர்மீனிய-அசர்பைஜான் உறவு இயல்பாக மாறுவது முதலியவை பற்றி விவாதித்தார்.