சீன-அமெரிக்க வணிக அமைச்சர் பேச்சுவார்த்தை
2023-05-26 11:07:03

சீன வணிக அமைச்சர் வாங்வென்டாவ் மே 25ஆம் நாள், அமெரிக்காவில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள்  பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட போது, அந்நாட்டின் வணிக அமைச்சர் ஜினா ரைமன்டோ அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.

அப்போது, சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து, இரு தரப்பினரும், நேர்மையான முறையில் ஆக்கப்பூர்வமான பரிமாற்றத்தை மேற்கொண்டனர். சீனா தொடர்பான அமெரிக்காவின் பொருளாதார வர்த்தகக் கொள்கை, அரை மின் கடத்திக் கொள்கை, ஏற்றுமதிக் கட்டுமானம், வெளிநாட்டு முதலீட்டுப் பரிசீலனை முதலியவை குறித்து சீனா கவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பரிமாற்ற வழிகளை உருவாக்குவதன் மூலம், பொருளாதார வர்த்தகம் தொடர்பான கவனம் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்த பரிமாற்றத்தை நிலைநிறுத்தி வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.