சொங்குவான்சுன் மன்றக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்
2023-05-26 11:39:07

மே 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கிய 2023ஆம் ஆண்டு சொங்குவான்சுன் மன்றக் கூட்டத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அதேநாள் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பினார்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், தற்போது புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி மற்றும் தொழில் மாற்றம் ஆழ்ந்த நிலையில் வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், வளர்ச்சி பற்றிய பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, சர்வதேச ஒத்துழைப்பு, திறப்பு மற்றும் பகிர்வு ஆகியவை முன்னெப்போதையும் விட பெரிதும் தேவைப்படுவதையும் சுட்டிக் காட்டினார். அதோடு, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தை ஊக்குவித்து, அதன் மூலம் பல்வேறு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும், கல்வி, அறிவியல் தொழில் நுட்பம், திறமைசாலி ஆகிய துறைகளில் பெய்ஜிங் தனது வலிமையை வெளிக்கொணர்ந்து, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தையும் அமைப்பு முறை புத்தாக்கத்தையும் ஒருங்கிணைக்கவும், சொங்குவான்சுன் பகுதியிலுள்ள முன்னோடி சோதனை மற்றும் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து முன்னேற்றவும் வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.