இந்தியாவின் தேசிய பூங்காவில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு
2023-05-26 17:30:56

வியாழனன்று, இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய பூங்காவில், மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன. இது, இந்த வாரத்தில் உயிரிழந்த மொத்த சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தியுள்ளது.    

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், "ஜுவாலா" என்ற பெண் சிறுத்தைக்கு , நான்கு குட்டிகள் பிறந்தன. அச்சிறுத்தை குட்டிகளில் ஒன்று, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.  கடந்த ஆண்டு, "இந்தியாவின் சிறுத்தை மறு அறிமுகம்" என்ற திட்டத்தின் கீழ், நம்பியாவிலிருந்து இந்தியாவிற்கு, இந்தப் பெண் சிறுத்தை கொண்டுவரப்பட்டது.    

மூன்று சிறுத்தை குட்டிகள், மூன்று நாட்களுக்குள் இறந்ததற்கு, "தீவிர வானிலை மற்றும் நீரிழப்பு" காரணம் என  கூறப்படுகிறது. ஏனெனில், அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.