சீனாவில் 5ஜி சேவை பயனாளர்கள் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பு
2023-05-26 11:23:33

இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவின் தொலைதொடர்புச் சேவைத் துறையின் மொத்த வருமானம் 56ஆயிரத்து 990 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.2 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது. இதனிடையில், அலைபேசிப்  பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிதானமாக அதிகரித்து வருகிறது. 5-ஜி பயனார்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரித்து வருகின்றது. ஏப்ரலின் இறுதிவரை, சீனாவின் மூன்று முக்கிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் அலைபேசி வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 170கோடியே 70இலட்சத்தைத் எட்டியுள்ளது.