சீனாவில் வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு
2023-05-26 20:31:39

சீன நிறுவனத்துடன் ஒத்துழைத்து, புதுப்பிக்கவல்ல எரியாற்றல் சாதனங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று அண்மையில் ஓர் ஆஸ்திரேலிய கூட்டு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். சீனாவின் தானியங்கி உற்பத்தித் தொழில் நுட்பம் பாராட்டத்தக்கதாக அவர் கருத்து தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் 4 திங்களில், சீனாவில் உள்ளப்படியே அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டுத் தொகை சுமார் 50 ஆயிரம் கோடி யுவானை ஈட்டியது. இது கடந்த ஆண்டை விட 2.2 விழுக்காடு அதிகம். இதில் பிரான்ஸ், பிரிட்டன், தென் கொரியா ஆகிய நாடுகளின் முதலீடு வேகமாக அதிகரித்துள்ளது. எங்களைப் பொருத்த வரை சீனச் சந்தை மிக முக்கியமானதாகும் என்று ஜெர்மன் ஹோலிஸ் குழுவின் தலைமை இயக்குநர் தெரிவித்தார். தற்போது இக்குழுமத்தின் மின்சார வாகனப் பொருட்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 10 திட்டப்பணிகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவில் வளர்ச்சிக்குரிய சூழல் நிதானமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. மேலும் 140 கோடி மக்கள் தொகை, 40 கோடி இடைநிலை வருமான் பெறுவோர் ஆகியவை கொண்ட இந்தப் பெரிய சந்தை, வெளிநாட்டு முதலீட்டுக்கு மாபெரும் ஈர்ப்பாற்றலைக் காட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகள் காலத்தில், சீனாவில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் பெற்ற லாப விகிதம் 9.1 விழுக்காட்டை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.