பெருந்தரவுத் தொழில் பொருட்காட்சி சீனாவில் தொடக்கம்
2023-05-26 15:48:19

2023ஆம் ஆண்டு சீன சர்வதேசப் பெருந்தரவுத் தொழில் பொருட்காட்சி 26ஆம் நாள், குய்சோ மாநிலத்தின் தலைநகர் குய்யாங்கில் துவங்கியது. பெருந்தரவுத் துறையில் சீனாவின் புதிய சாதனைகள் இதில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. அதோடு, தொடர்புடைய வணிகப் பரிமாற்றமும் முன்னேற்றப்படுகிறது.

இப்பொருட்காட்சி, பெருந்தரவு மற்றும் உண்மை பொருளாதாரத்தின் ஒருங்கிணைப்பு, மேக கணிமையின் எதிர்கால பங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கிளை கருத்தரங்குகளை தவிர, தொடர்புடைய துறைகளின் போட்டிகள் மற்றும் கண்காட்சிகளும் நடைபெறுகின்றன.

மேலும், 3 நாட்கள் நீடிக்கும் இப்பொருட்காட்சியில் ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வங்கள், தொழில் நுட்ப நிறுவனங்கள் பெருந்தரவுத் துறையின் புதிய சாதனைகளையும் பயன்பாடுகளையும் வெளியிடுகின்றன.