சீனாவின் சி919ரக பயணியர் விமானம் சேவை துவக்கம்
2023-05-27 16:46:52

சீனா சொந்தமாகத் தயாரித்த சி919ரக பயணியர் விமானம் மே 28ஆம் நாள் முதல் சேவைக்கு வரவுள்ளது. முதலாவது சேவையாக காலை 10:45 மணிக்கு ஷாங்காயில் இருந்து பெய்ஜிங்கிற்குச் செல்லும். பயண நேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்று சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் 26ஆம் நாள் தெரிவித்தது.