அமெரிக்க அரசு கடன் உச்சவரம்பு பற்றிய ஒத்த கருத்து
2023-05-28 16:37:10

அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பு மற்றும் வரச்செலவுத் திட்டம் குறித்து முதற்கட்ட ஒத்த கருத்து எட்டப்பட்டது. தொடர்புடைய உடன்படிக்கையின் ஆவணம் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்துக்கு விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், குடியரசுக் கட்சியின் பிரதிநிதியவைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் 27ஆம் நாளிரவு தனித்தனியாக அறிவித்தனர்.

மெக்கார்த்தி கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 28ஆம் நாளில் இந்த ஆவணம் கிடைக்கும். மேலும், இது குறித்த வாக்கெடுப்பு மே 31ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தற்போது அமெரிக்க அரசு கடன் சுமார் 31இலட்சத்து 46ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். இந்த கடனை அமெரிக்க குடிமக்களுக்கு பங்கீடு செய்தால், ஒருவருக்கும் 94ஆயிரம் அமெரிக்க டாலர் கடன் பொறுப்பேற்பதற்குச் சமமாகும்.