கோலாலம்பூரில் சீன-ஆசியான் நாகரிகப் பரிமாற்ற ஒத்துழைப்புக் கருத்தரங்கு
2023-05-28 17:11:53

சீன-ஆசியான் நாகரிகப் பரிமாற்ற ஒத்துழைப்புக் கருத்தரங்கு 27ஆம் நாள் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. சீன-ஆசியான் நாகரிகப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்பு என்பது நடப்புக் கருத்தரங்கின் தலைப்பாகும். பண்பாட்டை இணைப்பாகவும் புத்தகத்தைப் பாலமாகவும் கொண்டு சீனா ஆசியானின் பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு மற்றும் பல தரப்புகளின் வெளியீட்டுப் பரிமாற்ற ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகிறது. பரஸ்பர நாகரிகப் பரிமாற்றத்தை ஆழமாக்குவதோடு, மக்களிடையேயான தொடர்பையும் புரிந்துணர்வையும் முன்னேற்றியுள்ளது என்று விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.