4ஆவது சர்வதேச நெசவுப் பொருள் கண்காட்சி பாகிஸ்தானில் துவக்கம்
2023-05-28 16:25:59

4ஆவது சர்வதேச நெசவுப் பொருள் கண்காட்சி மே 26முதல் 28ஆம் நாள் வரை பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் தலைமை அமைச்சர் செபாஷ் செரீப் இக்கண்காட்சியின் துவக்க விழாவில் பங்கேற்றார்.

நெசவுத் துறை அந்நாட்டின் ஏற்றுமதியில் 60விழுக்காடு வகித்து ஏற்றுமதித் துறையின் ஆதாரத் தூணாக விளங்குகிறது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் மேலும் அதிகமான சர்வதேச ஒத்துழைப்புகளை ஈர்க்க வேண்டுமென செரீப் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.

கம்பளம் பாகிஸ்தானின் முக்கிய ஏற்றுமதி நெசவுப் பொருட்களில் ஒன்று. சீனாவிலிருந்து பட்டுகளை இறக்குமதி செய்து சீனாவுக்குக் கம்பளங்களை ஏற்றுமதி செய்து வருவதாக கண்காட்சியில் பங்கேற்ற பாகிஸ்தானின் கம்பள வணிகர்கள் தெரிவித்தனர். சீனாவின் பெரிய சந்தை மாபெரும் வாய்ப்புகளை அளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.