துருக்கியில் அரசுத் தலைவர் தேர்தலுக்கான 2ஆவது சுற்று வாக்குப் பதிவு
2023-05-28 16:55:58

துருக்கியில் அரசுத் தலைவர் தேர்தலுக்கான 2ஆவது சுற்று வாக்குப்பதிவு மே 28ஆம் நாள் நடைபெற்றது.  2 வாரங்களுக்கு முன்பு, மே 14ஆம் நாள் நடைபெற்ற முதலாவது சுற்று வாக்குப் பதிவில், வேட்பாளர்கள் மூவரில் எவருக்கும் பாதியளவுக்கும் மேலான ஆதரவு கிடைக்கவில்லை. அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, அதிக வாக்குகளைப் பெற்ற முதல் 2 வேட்பாளர்களிடையே 2ஆவது சுற்று வாக்குப் பதிவு நடைபெற வேண்டும். துருக்கியின் அரசுத்தலைவர் தேர்தல் வரலாற்றில் 2ஆவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.

உள்ளூர் நேரப்படி 28ஆம் நாள் காலை 8 முதல் மாலை 5 மணி வரை 2ஆவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியின் முதற்கட்ட முடிவு கூடிய விரைவில் 28ஆம் நாளிரவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.