மலேசியாவின் மிகப் பெரிய சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் கௌரவ விருந்தினரான சீனா நிகழ்ச்சி துவக்கம்
2023-05-28 16:46:47

மலேசியாவில் 40ஆவது கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியின் கௌரவ விருந்தினரான சீனாவின் நிகழ்ச்சி 27ஆம் நாள் கோலா லம்பூரிலுள்ள உலக வணிக மையத்தில் துவங்கியது.

ஆசியான் நாடுகளின் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சீனா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு முதன்முறையாக நிகழ்ச்சியை நடத்தியது. 30க்கும் அதிகமான சீன வெளியீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 150 பதிப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். இப்புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்களில், சீனாவும் மலேசியாவும் 30க்கும் அதிகமான பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சிகளைக் கூட்டாக நடத்தவுள்ளன.

கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி 1981ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மலேசியாவின் மிகப் பெரிய பண்பாட்டு நிகழ்வு இதுவாகும். 10நாட்கள் நீடிக்கும் நடப்புக் கண்காட்சி மே 26ஆம் நாள் தொடங்கியது.