புதிய வளர்ச்சி வங்கியுடன் ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விருப்பம்
2023-05-29 18:19:11

சீனா, புதிய வளர்ச்சி வங்கியுடனான விரிவான ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்கி அதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 29ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய வளர்ச்சி வங்கியின் 8ஆவது செயற்குழு ஆண்டுக் கூட்டம் மே 30, 31ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. சீனத் துணை தலைமை அமைச்சர் டிங்சியேசியாங் அதன் துவக்க விழாவில் பங்கேற்று உரைநிகழ்த்தவுள்ளார். புதிய வளர்ச்சி வங்கி பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்புகளில் முன்மாதிரியான சாதனைகளில் ஒன்றாகும். சர்வதேச பலதரப்பு வளர்ச்சி நிறுவனங்களில் முக்கியமான புதிய சக்தியாக அது பங்காற்றியுள்ளது. ஆண்டுக் கூட்டத்தில் வங்கியின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி திட்டவரைவு வகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.