துருக்கி அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன்
2023-05-29 09:59:31

பூர்வாங்க வாக்கு பதிவு முடிவின்படி, மே 28ஆம் நாள் நடைபெற்ற துருக்கி அரசுத் தலைவர் பதவிக்கான 2வது சுற்று வாக்களிப்பில், நடப்பு அரசுத் தலைவர் எர்டோகன், எதிராளியைத் தோற்கடித்து, மீண்டும் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொத்தம் கிட்டத்தட்ட 6 கோடியே 41 இலட்சம் பதிவு வாக்காளர்களில், 34 இலட்சம் பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். வாக்குகளை எண்ணும் அதிகாரப்பூர்வமான முடிவு, ஜுன் முதல் நாள், வெளியிடப்படவுள்ளது.

வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்து எர்டோகன் உரை நிகழ்த்துகையில், துருக்கி நிறுவப்பட்ட அடுத்த 100ம் ஆண்டு நிறைவுக்காக, அயராத முயற்சி மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.