அரசியல் வழிமுறையில் உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் சீனாவின் முயற்சிகள்
2023-05-29 18:41:54

ஐரோப்பிய-ஆசிய விவகாரத்துக்குப் பொறுப்பேற்கும் சீன அரசின் சிறப்புப் பிரதிநிதி லீ ஹுய், மே 15 முதல் 26ஆம் நாள் வரை, உக்ரைன், போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் மற்று ரஷியா ஆகியவற்றில் பயணம் மேற்கொண்டார். இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நீங் 29ஆம் நாள் கூறுகையில், அரசியல் வழிமுறையில் உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து சீனச் சிறப்புப் பிரதிநிதி பல்வேறு தரப்புகளுடன் பரந்த அளவிலான தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை மேற்கொண்டார். அவர், சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறியதோடு, பல்வேறு தரப்புகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து, மேலும் அதிகமான ஒத்த கருத்துக்களையும் உருவாக்கினார் என்று தெரிவித்தார்.

மேலும், லீ ஹுய்யின் பயணத்துக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்த பல்வேறு தரப்புகள், அமைதியான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் சீனாவின் ஆக்கப்பூர்வப் பங்களிப்பை உறுதிப்படுத்தின என்றும் அவர் தெரிவித்தார்.