கிசிங்கரின் அறிவுகளை அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்
2023-05-29 10:46:13

அண்மையில், அமெரிக்காவுக்கான சீன தூதர் சியே ஃபெங், முனைவர் கிசிங்கரைச் சந்தித்து, சீனாவின் சார்பாக, அவரது 100ஆவது பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டு, கிசிங்கர், சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களுடன் இணைந்து, இரு நாட்டுறவை இயல்பு நிலைக்கு முன்னெடுத்துச் சென்றார். இந்நடவடிக்கை தற்போது வரை இரு நாடுகளுக்கும் உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இரு நாட்டுறவு, சாலை சந்திப்பை மீண்டும் எட்டும் போது, வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்பவர்கள், 100 வயதான கிசிங்கரின் அறிவுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா சீனாவுடன் ஒத்துழைத்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரக்கூடிய தூதாண்மையுறவை நிறுவ வேண்டும். இது அமெரிக்காவின் நலனுக்குப் பொருத்தமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சீன-அமெரிக்க தூதாண்மையுறவின் உருவாக்கத்தை முன்னேற்றியதிலும், மத்திய கிழக்கு பகுதியில் தூதாண்மை பணி புரிந்ததிலும், மூத்த தூதாண்மை வல்லுனரின் திறனை அவர் வெளிகாட்டினார். உள் நாட்டு கட்சிகளுக்கிடையிலான சர்ச்சைகள் மற்றும் சொந்த நலன்களின் தலையீடுகளை அவர் அயன்ற அளவில் தவிர்த்தார்.

வரலாறு தலைசிறந்த பாடநூலாகும். சீனாவும் அமெரிக்காவும், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, சமநிலையில் கூட்டாக வாழ்ந்து, ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் இரு நாட்டுறவு வளர்ச்சியிலிருந்து பெறப்பட்ட அனுபவமாகவும், புதிய யுகத்தில் இரு நாடடுகள் ஒன்றுடன் ஒன்று சீராகப் பழகும் முறையாகவும் இது திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.