விரைவில் ஏவப்படும் ஷென்சோ-16 விண்வெளிக்கலம்
2023-05-29 10:39:34

சீன விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த பயன்பாட்டு மற்றும் வளர்ச்சிக் கட்டத்திற்கான பறத்தல் கடமை தலைமையகத்தின் முடிவின்படி, ஷென்சோ-16 விண்வெளிகலம் மூலம் ச்சிங்ஹைய்பாங், சூயாங்சு, குய்ஹைய்சௌ ஆகிய மூன்று விண்வெளிவீரர் மே 30ஆம் நாள், விண்வெளிக்குப் புறப்படவுள்ளனர்.

முன்னதாக மே 29ஆம் நாள் 11 மணியளவில், இந்த மூன்று விண்வெளிவீரர்களும் ஜியூசுவான் ஏவுதல் மையத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியார்கள் கூட்டத்தில் பங்கெடுப்பர்.