இந்தியாவின் மணிப்பூரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 40 பேர் கொல்லப்பட்டனர்
2023-05-29 10:55:32

கடந்த இரண்டு நாட்களில், பாதுகாப்புப் படையினரால் "குகி" குழுக்களைச் சேர்ந்த 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக, இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் என். பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை கூறினார். மேலும், சில தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின், கடும் ஒடுக்குமுறை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மாநில அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வன்முறையில், 4 பொதுமக்கள் மற்றும் ஒரு துணை ராணுவப் பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டதாக, மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.