முதலாவது சீனச் சர்வதேச விநியோக சங்கிலிக் கண்காட்சி
2023-05-30 17:21:20

முதலாவது சீனச் சர்வதேச விநியோக சங்கிலிக் கண்காட்சி இவ்வாண்டின் நவம்பர் 28முதல் டிசம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளதாக சீன சர்வதேச வர்த்தக முன்னேற்ற மன்றம் 30ஆம் நாள் அறிவித்தது.

உலகத்தை இணைத்து எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவது இக்கண்காட்சியின் தலைப்பாகும். ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இக்கண்காட்சியில் நுண்ணறிவு வாகனம், பசுமைசார் வேளாண்மை, தூய்மை எரியாற்றல், எண்ணியல் அறிவியல் தொழில்நுட்பம், ஆரோக்கிய வாழ்க்கை ஆகிய 5 முக்கிய துறைகளைச் சேர்ந்த விநியோக சங்கிலிகள் மற்றும் நவீன சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட விநியோக சங்கிலிகளின் காட்சியிடங்கள் அமைக்கப்பட உள்ளன. தொழில் சங்கிலியுடன் தொடர்புடைய உலகளாவிய மிகத் தனித்துவமான தொழில்நிறுவனங்கள் இதில் பங்கேற்று அவற்றின் புதிய தொழில்நுட்பம், புதிய தயாரிப்பு மற்றும் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளன.