சீன–அமெரிக்க ராணுவம் இடையேயான பேச்சுவார்த்தைக்கு சூழ்நிலையை உருவாக்க அமெரிக்கா தேவைப்படும்
2023-05-30 17:20:02

சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்கரி-லா பேச்சுவார்த்தையில் அமெரிக்க மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு குறித்த அமெரிக்காவின் கோரிக்கையை சீனா மறுத்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நீங் 30ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில், தற்போது சீன – அமெரிக்க ராணுவம் இடையேயான  பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதன் காரணத்தை அமெரிக்க தரப்பு புரிந்து கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நலன்கள் மீதான சீனாவின் கோரிக்கைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளிக்க வேண்டும். உடனடியாக தவறான செயல்களை மாற்றி, நல்லெண்ணத்தை காட்டும் அடிப்படையில், இரு நாட்டு ராணுவங்கள் இடையேயான தொடர்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கு இன்றியமையாத சூழ்நிலை மற்றும் நிபந்தனையை உருவாக்க வேண்டும் என்றும் மௌ நீங் வலியுறுத்தினார்.