ஆசிய வளர்ச்சி வங்கி, இலங்கைக்கு 35 கோடி அமெரிக்க டாலர் கடனை வழங்க அனுமதியளித்துள்ளது
2023-05-30 10:44:54

ஆசிய வளர்ச்சி வங்கி, திங்களன்று 35 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியை, இலங்கைக்கு வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது, இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்து, அந்நாட்டின் வரவு செலவுத் திட்ட ஆதரவை வழங்குவதற்கான கொள்கை அடிப்படையிலான கடன் உதவியாகும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி  உதவியின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இது பொருளாதாரத்தை சீரமைப்பதையும், பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.