3வது துருவச் சுற்றுச்சூழல் ஆய்வில் புதிய சாதனைகள்
2023-05-30 10:38:05

3வது துருவச் சுற்றுச்சூழல் மற்றும் பூமி முறைமை அறிவியல் கருத்தரங்கு 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதில், சீனா, ஜெர்மனி, அமெரிக்கா, பாகிஸ்தான், நேபாளம் முதலிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், 3வது துருவச் சுற்றுச்சூழல் ஆய்வில் கிடைத்த புதிய முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை அறிமுகப்படுத்தினர்.

இக்கருத்தரங்கில், சீனாவின் 2வது சின்காய்-திபெத் பீடபூமி அறிவியல் ஆய்வு குழுத் தலைவரும் மூத்த அறிஞருமான யோவ் டன் டுங், இந்த ஆய்வுப் பணியின் முக்கிய முன்னேற்றங்களை வெளியிட்டார். இவை, நாட்டின் முக்கிய திட்டப்பணிகளின் கட்டுமானம் மற்றும் தேசிய உயிரினப் பாதுகாப்பு முறைமையின் மேம்பாட்டுக்குப் பயனுள்ள ஆதாரம் அளித்து, காலநிலை மாற்றச் சமாளிப்பு, கார்பன் வெளியேற்ற உச்சிநிலை மற்றும் சமநிலை தொடர்பான இலக்குகள் நனவாகுவதற்குத் துணை புரியும் என்று தெரிவிக்கப்பட்டது.

புவியின் 3வது துருவமான சின்காய்-திபெத் பீடபூமி, சீனாவுக்கு மட்டுமல்ல உலகின் காலநிலை மாற்றத்துக்கும், ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.